‘நான்-வெஜ்ஜூக்கு நாட் அலோவ்ட்’ : உலகின் முதல் சைவ நகரம் இந்தியாவில் தான் உள்ளது தெரியுமா?

 

‘நான்-வெஜ்ஜூக்கு நாட் அலோவ்ட்’  : உலகின் முதல் சைவ நகரம் இந்தியாவில் தான் உள்ளது தெரியுமா?

. விலங்குகளை கொல்வது  சட்டத்திற்கு எதிரானது என்று அங்கு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

குஜராத்தில் அமைந்துள்ள பாலிடானா என்ற சிறிய நகரம் ஒன்று உள்ளது. இங்கு ஜெயின் சமூகத்தினர் மட்டுமே உள்ளனர். விலங்குகளை கொல்வது  சட்டத்திற்கு எதிரானது என்று அங்கு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 200ற்கும் மேற்பட்ட ஜெயின் துறவிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். மேலும் விலங்குகளைக் கொன்றால் ஒவ்வொரு ஜெயின் துறவியாக இறப்பார்கள் என்று அறிவித்தனர். 

palitan

இதை தொடர்ந்து பாலிடானா நகரத்தை சுற்றி  இறைச்சி கடைகள் இருக்கக் கூடாது என்று பெரிய போராட்டம் நடத்தினார்கள். இதனால் அம்மாநில அரசாங்கம், இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டது.

 

travel

இதன் மூலம்   உலகின் முதல் சைவ நகரமாக பாலிடானா மாறியது.  இருப்பினும் இங்கு மாட்டுப் பால், நெய், வெண்ணெய் விற்பனை இங்கு அனுமதி உண்டு.  இங்கு வீடுகளை விட கோயில்களே அதிகமுள்ள இந்த நகரத்தை கோயில்கள் நகரம் என்றும் அழைக்கின்றனர்.  பார்க்கவும், கேட்கவும் வியப்பாக உள்ள இந்த நகரத்தைக் காண பல்வேறு சுற்றுலா பயணிகள்  பாலிடானா நகரத்தை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.