நான்-வெஜ்ஜிலிருந்து வெஜிடேரியனுக்கு மாறிய தமன்னா…இதுதான் காரணமாம்!

 

நான்-வெஜ்ஜிலிருந்து வெஜிடேரியனுக்கு மாறிய தமன்னா…இதுதான் காரணமாம்!

நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர்

நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர்  நடிகை தமன்னா.

 

இவர் விஷாலுடன் இணைந்து  நடித்திருந்த  ஆக்ஷன் திரைப்படம்  சமீபத்தில் வெளியானது. தற்போது நடிகை தமன்னா  ‘த நவம்பர் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த  வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார்.

 


 

அதேபோல் நடிகை தமன்னா நவாஜூதின் சித்திக்  ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

ttn

இந்நிலையில் நடிகை தமன்னா ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வாழ்க்கையை  மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் பேசினார். அதில், ‘நான் அதிகமான புத்தகங்களைப் படிக்கமாட்டேன். ஆனால்  நான் படித்த புத்தகங்கள் 2 தான். ‘ஓஷோவின் உண்மையான பெயர்’ என்ற புத்தகம் படித்ததின் மூலம் ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.  அதேபோல் கிம் பர்னூயின் எழுதிய ‘பிட்ச்’ என்ற புத்தகத்தை படித்துவிட்டு நான் அசைவ உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இந்த இரண்டு புத்தகங்கள் மூலம் என் வாழ்க்கையில்  மாற்றம் ஏற்பட்டது’ என்றார்.