‘நான் விஸ்கிக்கு அடிமை; அதனால் தான்… ‘ : ஷாக் கொடுக்கும் கமல் மகள்!

 

‘நான் விஸ்கிக்கு அடிமை; அதனால் தான்… ‘ :  ஷாக் கொடுக்கும் கமல் மகள்!

என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவே நான் சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தேன்

 சினிமாவிலிருந்து சிறிதுகாலம் ஓய்வெடுத்த காரணத்தை  நடிகை ஸ்ருதிஹாசன்  கூறியுள்ளார். 

தெலுங்கில் பிரபல நடிகை லட்சுமி மஞ்சு  தொகுத்து வழங்கும் ஃபிட் அப் வித் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில்  பிரபலங்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில்   நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார்.

sruti

 பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சலை காதலித்து வந்த ஸ்ருதி  சமீபத்தில் அவரை பிரிந்தார். இது  குறித்துப் பேசிய அவர், காதல் பிரிவு எனக்கு வருத்ததை அளிக்கவில்லை.  மாறாக எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்தது. சிறந்த காதலுக்காகக் காத்திருக்கிறேன். அவ்வாறு நிகழ்ந்தால் கண்டிப்பாக அறிவிப்பேன்’ என்று வெளிப்படையாகப் பேசினார். 

sruti

மேலும் ஸ்ருதி  ஹாசன் 2017இல் தெலுங்கில்  வெளியான கட்டமராயுடு படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து சிறிதுகாலம் ஓய்வெடுத்தார்.  இந்த இடைவெளி குறித்து கூறியுள்ள அவர்,  நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன். இதனால் என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவே நான் சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.ஸ்ருதி  ஹாசனின்  இந்த பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.