‘நான் விஜய்யை காக்காய் பிடிக்கிறேனா? ‘ : பிகில் சர்ச்சைக்கு நடிகர் விவேக் விளக்கம்!

 

‘நான் விஜய்யை காக்காய் பிடிக்கிறேனா? ‘ : பிகில் சர்ச்சைக்கு நடிகர் விவேக் விளக்கம்!

பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பிய தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். 

பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பிய தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். 

நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 19ஆம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் சாய் ராம் பொறியில் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக், சிவாஜியின் நெஞ்சில் குடியிருக்கும் பாடல் விஜய்யால்  பிரபலமாகியுள்ளது என்றார். பொதுவாக விஜய் மேடையில் தனது பேச்சை ஆரம்பிக்கும் முன் என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு என்று கூறுவார். அதேபோல் ஒருபாடல் ஒன்றும் பிகில்  படத்தில் இடம்பெற்றுள்ளது. 

vivek

இருப்பினும் விவேக்கின் இந்த கருத்துக்குச் சிவாஜி சமூகநலப் பேரவை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில், விவேக், இரும்புத்திரை என்ற படத்தில் இடம்பெற்ற நடிகர் திலகத்தின் அருமையான பாடலை கிண்டலடித்துள்ளார் . ஒரு நடிகரை காக்காய் பிடிக்க விவேக் இப்படிப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்திருந்தது. 

 

இதற்குப் பதிலளித்துள்ள நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க’ என்று பதிவிட்டுள்ளார்.

பிகில்  ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் முடிந்ததிலிருந்து அதைச் சுற்றிப் பல சிக்கல்கள் உருவாகிவருவது விஜய் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.