நான் ரெடி நீங்க ரெடியா? – பொன்.ராதாகிருஷ்ணன்

முந்தின தேர்தலில் வென்று, மத்திய அமைச்சராக இருந்துவிட்டு, இந்த தேர்தலில் தோற்றுப்போனால் சங்கடமாகத்தான் இருக்கும். அதுவும் தமிழகத்திலிருந்து பாஜகவை மலரவைத்த ஒரே வேட்பாளர் என்றவகையில் பொன்.ராதாகிருஷ்ணனின் ஏமாற்றம் புரிந்துகொள்ளக்கூடியதே. முந்தினமுறை மத்திய நிதித்துறை இணை அமைச்சர், இந்தமுறை ஸ்ட்ரெய்ட்டாக நிதியமைச்சராகிவிடலாம் என பெருங்கனவு கண்டிருந்தார் போல, கனவு கனவாகவேப் போனதால் விரக்தியில் ‘தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தங்கள் சொத்துக்களை விற்று விவசாயிகள் கடனை அடைக்கவேண்டும்’ என்ற வினோதமான கோரிக்கை விடுத்தார்.

Pon.Radhakrishnan

எம்.பிக்கள் சொத்துக்களை விற்று விவசாயிகள், மாணவர்கள் கல்விக்கடனை அடைக்க வேண்டும் என்ற பொன்னாரின் கோரிக்கை, தமிழக எம்.பிக்களுக்கு மட்டும் என சுருக்கிக்கொண்டதுதான் நம் வருத்தம். போகட்டும். முன்னாள் மத்திய இணை அமைச்சரின் கோரிக்கையை கேள்விபட்ட காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு, ‘பொன்னார் முதலில் தன் சொத்துக்களை விற்று விவசாயிகள் கடனை அடைக்கட்டும்” என கவுன்ட்டர் கொடுக்க, இதற்காகத்தானே ஆசைபட்டேன் பாலகுமாரா என்று காத்திருந்த பொன்னார் இப்போது “எனது சொத்துக்களை விற்று விவசாயிகள் கடனை அடைக்கத் தயார்’ என எசப்பாட்டு பாடியிருக்கிறார். கடந்த தேர்தலின்போது வேட்புமனுவில் தன்னுடைய சொத்து மதிப்பு ஏழரை கோடி என தெரிவித்திருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.