நான் மோடியை எதிர்த்த மாதிரி வேற கேரள காங்கிரஸ் எம்.பி. யாராவது எதிர்த்து இருக்கிறார்களா? சதிதரூர் சவால்…

 

நான் மோடியை எதிர்த்த மாதிரி வேற கேரள காங்கிரஸ் எம்.பி. யாராவது எதிர்த்து இருக்கிறார்களா? சதிதரூர் சவால்…

நாடாளுமன்றத்தில் மோடி அரசை நான் எதிர்த்ததில் 10 சதவீத அளவுக்காவது கேரள காங்கிரஸ் எம்.பி.க்கள் யாராவது எதிர்த்து இருந்தா கூறுங்க பார்க்கலாம் என கேரள காங்கிரசுக்கு சவால் விடுத்துள்ளார் சசிதரூர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் அண்மையில், கடந்த காலங்களில் செய்யாததை அவர் செய்ததால்தான் அவரை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்துள்ளனர். எப்போதும் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்வது ஒரு போதும் உதவாது என பேசி இருந்தார். ஜெய்ராம் ரமேஷின் கருத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து கூறியிருந்தார்.

ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடி நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது பாராட்ட வேண்டும். கண்களை மூடிக் கொண்டு மோடியை எதிர்ப்பது சரியல்ல என சசி தரூர் தெரிவித்து இருந்தார். சசி தரூர் கருத்து கேரள காங்கிரஸ்காரர்களை பொங்க வைத்து விட்டது. மோடியை புகழ்ந்து பேசியதற்கு காரணம் கேட்டு கேரள காங்கிரஸ் சசி தரூரிடம் விளக்கம் கேட்டது.

மோடி

கேரள காங்கிரஸ்  நோட்டீசுக்கு சசி தரூர் கடும் பதிலடி கொடுத்துள்ளார். கேரள காங்கிரசுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதமர் மோடியை நியாயப்படுத்த நான் முயன்றேன் என்று நீங்கள் நம்புவதை கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். நான் அப்படி பேசியதாக கூறும் அறிக்கையை காட்டினால் நான் உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். ஏனெனில் நான் அது போன்று செய்யவில்லை என்பதுதான் விஷயம்.

காங்கிரஸ் சின்னம்

அண்மையில் நடந்து முடிந்த 8 வார நாடாளுமன்ற கூட்டத்தொடரை கண்டிப்பாக பாருங்க. நமது அரசியலமைப்பு உணர்வு மற்றும் காங்கிரஸ் கட்சியின் மதிப்புக்கு எதிராக மோடி அரசு கொண்டு வரும் மசோதாவையும் படித்து, ஆய்வு, எதிர்பார்ப்பு மற்றும் எதிர்க்க நான் மேற்கொண்ட முயற்சியில் குறைந்தபட்சம் 10 சதவீத முயற்சியை மேற்கொண்ட நம்ம மாநிலத்தை சேர்ந்த ஒரு எம்.பி.யை கண்டுபிடியுங்க பார்ப்போம்.

50 முறை நாடாளுமன்றத்தில் குறுக்கீடு செய்துள்ளேன். 17 மசோதாக்களை எதிர்த்து பேசி உள்ளேன். கேரளாவை சேர்ந்த எனது விமர்சகர்கள் நான் செய்தது போன்று வேறு யாரும் செய்தார்கள் என்று கூற முடியுமா? என்பது பல்வேறு விஷயங்கள் கடிதத்தில் சதி தரூர் குறிப்பிட்டுள்ளார்.