நான் முஸ்லிம்… என் மனைவி இந்து… என் குழந்தைகள் இந்தியர்கள்! – ஷாரூக் கான் பளீர் பதில்

நான் முஸ்லிம்… என் மனைவி இந்து… என் குழந்தைகள் இந்தியர்கள்! – ஷாரூக் கான் பளீர் பதில்

தன்னுடைய மத நம்பிக்கை பற்றி நடிகர் ஷாரூக் கான் பேசியிருப்பது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் சிறுபான்மையினர் மனதில் அச்ச உணர்வு நீடித்து வருகிறது. இந்த சூழலில் தமிழகம் வந்த பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கானிடம், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி நிருபர்கள் கேட்டனர். ஆனால், அதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்றார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், மதம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. 

shahrukh-khan-speech

அதற்கு அவர், “வீட்டில் நாங்கள் மதம் பற்றி பேசியது இல்லை. நான் ஒரு இஸ்லாமியன் என்றாலும் என்னுடைய மனைவி ஒரு இந்து. என் குழந்தைகள் இந்தியர்கள். என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, என்ன மதம் என்று நிரப்ப வேண்டி வந்தது. அப்போது என் மகள் நாம் என்ன மதம் என்று கேட்டார். அதற்கு நாம் அனைவரும் இந்தியர்கள் என்று சொன்னேன். அந்த விண்ணப்பப் படிவத்திலும் இந்தியன் என்றே நிரப்பினேன்.
அவர்கள் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் இல்லை. எங்களுக்குள் மத வேறுபாடு இல்லை. நான் இஸ்லாமியன் என்றாலும், தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுவதில்லை. ஆனால், இஸ்லாத்தின் கொள்கைகளை நம்புகிறேன். அது ஒரு நல்ல மதம் மற்றும் நல்ல ஒழுக்கங்கள் அதில் உள்ளது என்று நம்புகிறேன்” என்று கூறும்போதே அரங்கிலிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஷாரூக்கின் பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.