’நான் போடுவேண்டா… போட்டா உனக்கென்ன..?’ லண்டனில் கோட்டு சூட்டில் டாக்டருடன் தாறுமாறு செய்த எடப்பாடி..!

 

’நான் போடுவேண்டா… போட்டா உனக்கென்ன..?’ லண்டனில் கோட்டு சூட்டில் டாக்டருடன் தாறுமாறு செய்த எடப்பாடி..!

லண்டன் சென்றவுடன் மொத்தமாக மாறி விட்டார் எடப்பாடி பழனிசாமி. எதிர்கட்சிகள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என தன் மனதில் நினைத்ததை நிறைவேற்றி விட்டார்.

லண்டன் சென்றவுடன் மொத்தமாக மாறி விட்டார் எடப்பாடி பழனிசாமி. எதிர்கட்சிகள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. தன் மனதில் நினைத்ததை நிறைவேற்றி விட்டார்.

தமிழகத்தில் வெள்ளை வேஷ்டி- சட்டை போட்டு விவசாயியாக தன்னை காட்டிக் கொண்டவர் எடப்பாடி. லண்டன் சென்றது முதல் முக நூல், டிவிட்டர், இண்ட்ஸ்டகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் அவர் செய்த ஒரு காரியம் தான் டிரெண்டிங்.edappadi

உண்மையில் நெட்டிசன்களுக்கு அல்வா கொடுத்து விட்டார். யாருமே எதிர்பார்க்கவில்லை. வைரலாகி விட்டது எடப்பாடியாரின் அமெரிக்க டிரஸ் கோட்.  பால்க்காரன் அண்ணாமலை போல இருந்தவர், லண்டனில் அண்ணாமலையாக கெத்து காட்டி விட்டார். எடப்பாடியார் முதல்வராக பதவியேற்றபோது அவரை இளக்காரமாக பார்த்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால் சற்றும் மனம் சுணங்காமல் அதிரடியை அமைதியாக வெளிக்காட்டி வந்தார். 
 
எதிர்க் கட்சிகளை அவர் சமாளிக்கும் விதம், தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள், துரோகங்கள், முதுகு பின்னால் குத்தல்கள், உராய்வுகள் ஏற்படும்போதெல்லாம் அப்படியே திருப்பதி அமைதி படை அமாவாசையாக எதி கட்சிகளுக்கும் உள்கட்சி நிர்வாகிகளுக்கும் அல்வா கொடுத்து வந்தார்.   ஒருபக்கம் வேலுமணி என்றால் மறுபக்கம் தங்கமணி, இடையே ஜெயக்குமார். வருகிற வசவுகளை லாவகமாக எதிர்கொண்டு தூக்கி வீசி தவிடுபொடியாக்க செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி என பக்காவாக செட்டிலாகி விட்டார் எடப்பாடியார்.eps

அமைச்சர் மணிகண்டனை, முன்னாள் அமைச்சராக்கியது, ஓ.பி.எஸ்-ஐ உள்ளங்கைக்குள் தாங்கும் பாஜகவின் மோடியை தனக்கு ஏற்ப அசைய வைத்த லாவகம், திமுகவை சமாளித்த விதம், தினகரனை ஒன்றுமில்லாமல் செய்த தைரியம் என எடப்பாடியார் பக்கம் ஏகப்பட்ட லிஸ்ட் இருக்கிறது. இதனால் manikandanதான் மணிகண்டனை அவர் டக்கென முடிவு செய்து கப்பென தூக்கி வீச முடிந்தது.

எதிர்ப்புகளே இல்லாமல் கபாலி காட்சிகளாக இப்போது எதிர்க்கட்சிகள் எடப்பாடியாரை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இதையெல்லாம் வைத்தும், லண்டனில் அவர் போட்டிருந்த சூட் கோட் சூப்பர் டிரஸ்ஸையும் பார்க்கும்போது ‘கபாலி’ படத்தில் வருவது போல, “நான் கோட் சூட் போட்டா உனக்கு புடிக்காதுன்னா அதையும் போடுவேண்டா” என்று ரஜினி ஆவேசமாக சொல்லும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. லண்டனில் எடப்பாடி அதிரிபுதிரியாக கோட் சூட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இங்கு பல பேர் அதைப் பார்த்து காண்டாகி உள்ளனர்.

அதுவும் டாக்டரான அமைச்சர் விஜயபாஸ்கருடன் தாறுமாறு செய்துவிட்டார் எடப்பாடி.