நான் பிடிச்ச முயலுக்கு 3 கால்தான்.. சொந்த கட்சியினரே மாறி மாறி ஆப்பு வைக்கும் போதும் அடங்க மறுக்கும் காங்கிரஸ்….

 

நான் பிடிச்ச முயலுக்கு 3 கால்தான்.. சொந்த கட்சியினரே மாறி மாறி ஆப்பு வைக்கும் போதும் அடங்க மறுக்கும் காங்கிரஸ்….

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தபோதும் அந்த கட்சி தலைமை காஷ்மீர் விவகாரத்தில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கி வந்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீரை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசதங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.மேலும் இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை (2019) நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது.

மோடி, அமித் ஷா

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைமை கடுமையாக தாக்கி பேசியது. ஆனால், அந்த கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடா புவனேஸ்வர் கலிட்டா,  சிறப்பு சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்ப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி தற்கொலையை நோக்கி செல்கிறது என்று கூறியதுடன் பதவியை ராஜினாமாவும் செய்து விட்டார். 

மக்கள் ஆதரவு

இந்நிலையில் பா.ஜ.வை எதிர்பாராத வகையில், காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமான ஜோதிராதித்ய சிந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.  இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அந்த கூட்டத்தில் விவாதித்தனர்.

கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரை இந்தியா ஒரு மாநிலமாக ஏற்று கொண்டது. அந்த மாநிலத்தின் நிலையை அல்லது அதன் பகுதியை யூனியன் பிரதேசமாக சுருக்கவோ எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது. தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கை ஒரு தலைபட்சமான, வெட்கக்கேடான மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.