‘நான் நீதிபதி’… ரூ.21 லட்சத்தை ஏமாற்றிய நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் உறுப்பினர் கைது !

 

‘நான் நீதிபதி’… ரூ.21 லட்சத்தை ஏமாற்றிய  நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் உறுப்பினர் கைது !

விருதுநகர் அருகே உள்ள வள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

விருதுநகர் அருகே உள்ள வள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு வழக்கிலிருந்து விடுவிக்க, சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் உறுப்பினர் சுப்புராஜ் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு சுப்புராஜ் தான் நீதிபதி என்று கூறி, வழக்கிலிருந்து விடுவிக்க ரூ .21 லட்சம்  பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் படி, வேலுச்சாமியும் பணத்தைக் கொடுத்துள்ளார். 

tth

அதன் பின்னர், வேலுச்சாமி அந்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால், சுப்புராஜ் என்னிடம் பணமாக இல்லை, காசோலை தருகிறேன் என்று கூறி காசோலை கொடுத்துள்ளார். ஆனால், வங்கியில் அந்த காசோலை செல்லாமல் போனது. சுப்புராஜ் அந்த பணத்தை மோசடி செய்ததாகக் கூறி  ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். அந்த வழக்கின் விசாரணை . ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு, சுப்புராஜ் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன் படி, சுப்புராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.