நான் தொடர்ந்து துணை முதல்வராக இருக்கணும்ன்னா அவருக்கு ஓட்டு போடுங்க! வாக்காளர்களிடம் கெஞ்சிய பா.ஜ.க. தலைவர்

 

நான் தொடர்ந்து துணை முதல்வராக இருக்கணும்ன்னா அவருக்கு ஓட்டு போடுங்க! வாக்காளர்களிடம் கெஞ்சிய பா.ஜ.க. தலைவர்

நான் தொடர்ந்து துணை முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றால், எங்களது வேட்பாளர் ஸ்ரீமந்த் சாவதிக்கு ஓட்டு போடுங்க என அம்மாநில துணை முதல்வர் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தது பெரும் பரபரப்பாகி உள்ளது

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பா.ஜ.க. குறைந்தபட்சம் 6 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும். இதனால் பா.ஜ.க. கட்சியை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளது. இதனால் பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ரீமந்த் பாட்டீல்

கர்நாடகாவில் குமாராசாமி தலைமையிலான மதசார்ப்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் ஸ்ரீமந்த் பாட்டீல். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஸ்ரீமாந்த் பாட்டீல் அந்த கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது கக்வாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவின் துணை முதல்வர் லஷ்மன் சாவதி ஆதனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு குழுமியிருந்த வாக்காளர்களிடம், நான் துணை முதல்வராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பினால்  ஸ்ரீமந்த் பாட்டீலுக்கு வாக்களியுங்கள் என கோரிக்கை விடுத்தார். அண்மையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இது ஸ்ரீமந்த் பாட்டீல் தேர்தல் அல்ல. இது எடியூரப்பாவின் தேர்தல். நான் தொடர்ந்து முதல்வராக இருப்பதை உறுதி செய்வதற்காக பாட்டீல் காங்கிரசிலிருந்து விலகினார் என பேசியது குறிப்பிடத்தக்கது. இதனை பார்க்கும்போது, முந்தைய குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மைதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.