‘நான் தேசியத் தலைவர்; ஹிந்துத்வத் தலைவர் அல்ல!’ – ராகுல் காந்தி பதிலடி

 

‘நான் தேசியத் தலைவர்; ஹிந்துத்வத் தலைவர் அல்ல!’ – ராகுல் காந்தி பதிலடி

ராகுல் காந்தி கோயிலுக்குச் செல்வதை விமர்சித்திருந்த பாஜகவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

போபால்: ராகுல் காந்தி கோயிலுக்குச் செல்வதை விமர்சித்திருந்த பாஜகவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பிரச்சாரங்களை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயிலுக்கு சென்றிருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கோத்திரம், பூணூல் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “நான் ஒவ்வொரு முறை கோவிலுக்குச் செல்லும்போதும் பாஜக-வினர் அதை விமர்சிக்கின்றனர். நாட்டில் உள்ள கோவில்கள் அனைத்தும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தனிச் சொத்தா? அங்கு செல்ல அமித்ஷா மற்றும் மோடி மட்டும்தான் உரிமம் பெற்றுள்ளனரா? 

எனக்குத் தோன்றினால் நான் எந்தக் கோவிலுக்கு வேண்டுமானாலும் செல்வேன். தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும், குருத்வாராக்களுக்கும் செல்வேன். குறிப்பிட்ட மதத்தை மட்டும் அடையாளமாக்கிக் கொள்ளவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில் நான் தேசியத் தலைவர்; ஹிந்துத்வத் தலைவர் அல்ல” என பாஜகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.