நான் தலித் என்பதால் மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது: கர்நாடகா துணை முதல்வர் குற்றச்சாட்டு

 

நான் தலித் என்பதால் மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது: கர்நாடகா துணை முதல்வர் குற்றச்சாட்டு

தலித் என்பதால் மூன்று முறை எனக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என கர்நாடகா துணை முதல்வர் பரமேஷ்வரா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகா: தலித் என்பதால் மூன்று முறை எனக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என கர்நாடகா துணை முதல்வர் பரமேஷ்வரா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் ஜி பரமேஷ்வரா தன் அரசியல் பயணத்தில் ஏற்பட்ட தடைகள் பற்றியும், தலித் சமுதாயம் என்பதால் ஒடுக்கப்படுவது குறித்தும் தெரிவித்துள்ளார். தாவண்கரேவில் நடந்த நிகழ்வில் அவர், காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலருக்கு தலித் தலைவர்களின் வளர்ச்சி பிடிக்கவில்லை. தலித் என்பதால் மூன்று முறை எனக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. நான் மட்டுமல்ல, பிகே பசவலிங்கப்பா, கேஎச் ரங்கநாத் உள்ளிட்டோருக்கும் முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது என பேசினார்.

மேலும் அவர், அரசாங்க அளவிலும் தலித் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். இடஒதுக்கீடு இருந்தாலும் பதவி உயர்வு விஷயத்தில் தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. என்னை அரசியல் ரீதியாக சிலர் ஒடுக்க நினைக்கின்றனர் என தெரிவித்தார்.