‘நான் டாக்டர் இல்ல டான்’:  பிக்பாஸ் ஆரவின் மார்க்கெட் ராஜா டீஸர் இதோ!

 

‘நான் டாக்டர் இல்ல டான்’:  பிக்பாஸ் ஆரவின் மார்க்கெட் ராஜா டீஸர் இதோ!

நடிகர் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள  மார்க்கெட் ராஜா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள மார்க்கெட் ராஜா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்வ. அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டம் வென்ற இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

தற்போது இவர் காதல் மன்னன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அமர்க்களம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்துள்ளார். ஆரவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவரின் தாயக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். மேலும் காவ்யா தாப்பர், நிகேஷா படேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1-ம் தேதி  படக்குழு வெளியிட்டனர். இந்த நிலையில் இன்று படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான உருவாகியுள்ள இந்த டீசரில் தனுஷ் என்ற பெயரைக் கேட்கும் ராதிகா சீக்கிரமே பெரிய இடத்து மாப்பிள்ளை ஆகி விடுவாய் என்று கூறும் வசனமும் சிறிது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று நான் டாக்டர் அல்ல டான் என்று வசனம் பேசும் ஆரவ், பிக் பாஸ்யில் கொடுத்த மருத்துவ முத்தம் போல் இதிலும் கொடுத்துள்ளார். மேலும் இந்த  டீசரை பார்க்கும் பொழுது கமல்ஹாசனின் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் கண்டிப்பாக ஞாபகப்படுத்தும்.