நான் ஏன் விளக்கேற்ற வேண்டும்… – நெட்டிசன்களின் நியாயமான கேள்விக்கு பதில் கிடைக்குமா?

 

நான் ஏன் விளக்கேற்ற வேண்டும்… – நெட்டிசன்களின் நியாயமான கேள்விக்கு பதில் கிடைக்குமா?

கொரோனா தீவிரமாக பரவி வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆய்வு செய்ய போதுமான வசதிகள் இல்லை. கொரோனா நோயாளியை கண்டறிந்து தனிமைப்படுத்த முடியவில்லை

கொரோனா தீவிரமாக பரவி வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆய்வு செய்ய போதுமான வசதிகள் இல்லை. கொரோனா நோயாளியை கண்டறிந்து தனிமைப்படுத்த முடியவில்லை. மருத்துவர்களுக்கு கூட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. இந்த நிலையில் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று மோடி கூறியது பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

modi-lights

இது தொடர்பாக ஏழுமலை வெங்கடேசன் என்ற ஃபேஸ்புக் பதிவாளர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் ஏன் விளக்கேத்தணும்?
ஆறு ஆண்டுகளாக செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தாத ஒரு பிரதமர்..
உலகமே கொரோனாவால் கதறும் இந்த நிலையிலும் கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளிக்க முன்வராமல் ஒன் வேயில் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு அதிசய பிரதமர்..
கொரோனா பாதிப்பால் நாட்டின் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை சீர்படுத்த இவ்வளவு செயல்திட்டங்களை வைத்திருக்கிறேன் என்று விளக்காத ஒரு பிரதமர்..
வங்கி ஈஎம்ஐ மூன்று மாதம் தள்ளிவைப்பு என்று சொல்லிவிட்டு, கணக்கில் இருந்தால் பணத்தை பிடிக்கும் பிரதமர், மூன்று மாதங்களுக்கும் வட்டி என ஏமாற்றிட்டார் என் பெயர் எடுத்த பிரதமர்..
பொருளாதார கோணங்களையும் அறிவியல் பார்வைகளையும் முன்னுரிமை கொடுக்காமல் பின்னுக்கு தள்ளிிவிட்டு, கையை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என்று சொன்னால், கேள்வியே கேட்காமல் நான் விளக்கேற்றவேண்டுமா?

modi-89

தேசபக்தி, தேச ஒற்றுமை என்ற வார்த்தையை சொல்லிவிட்டு எதைவேண்டுமானாலும் சொல்வீர்கள், அதை நாங்கள் செய்யணும்.. செய்யலைன்னா தேச துரோகிகள்.. விளக்கேத்தாத நாங்க தேச விரோதின்னா பிரதமர் சீட்டுல உட்கார்ந்துகிட்டு ஆறு வருஷமா கேள்விகளையே எதிர்கொள்ளாத நீங்க யாரு.?,.
உயிர் போற நேரத்துல தாகத்துக்கு தேவை நீரு.. திருநீர் அல்ல. பொதுவா இந்த நெஞ்சை நக்கற வாசகங்களுக்கு நாம பலியாவறதேயில்லை..
இப்போதும் ஆக்கபூர்வ யோசனை சொல்லுங்கள் பிரதமரே.. முதல் ஆளாய் ஓடிவருகிறோம்” என்று கூறியுள்ளார்.