நான் ஏன் சிறைக்கு சென்றேன் தெரியுமா? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

 

நான் ஏன் சிறைக்கு சென்றேன் தெரியுமா? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை. மக்கள் நலனுக்காக சிறை சென்றேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை. மக்கள் நலனுக்காக சிறை சென்றேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தருமபுரியில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும். இப்பொழுது தர்மத்தை சூது கவ்வியுள்ளது. காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் திமுகவை விமர்சிக்கிறார்கள். தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள். மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை. 

MK Stalin

நீட் தேர்வு கொண்டு வந்தார்கள், அரியலூரில் அனிதா என்ற மாணவி உயிரிழந்தார். அதற்கு காரணம் யார்? அது மட்டுமா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது.டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் இல்லை. தபால், ரயில்வே துறைகளில் வட மாநிலத்தவர்கள் வந்துள்ளார்கள், இதை அரசு கண்டுகொள்ளவில்லை. தியாகம், சிறை, சித்திரவதை என்னவென்றே செய்தவர்களுக்கு, என்னை பற்றி பேசுவதற்கு அருகதையே கிடையாது.  நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை. மக்களின் நலனுக்காக சிறை சென்றவன். எடப்பாடி பால் வடியும் முகம். அதனால் தான் தமிழகத்திற்கு கள்ளிப்பால் ஊற்றி கொன்று வருகிறார்” எனக்கூறினார்.