நான் எப்படி நடந்துகொண்டேனோ அதுபோல் நடந்துகொள்ளுங்கள் மோடி… மன்மோகன் சிங் கடிதம்!

 

நான் எப்படி நடந்துகொண்டேனோ அதுபோல் நடந்துகொள்ளுங்கள் மோடி… மன்மோகன் சிங் கடிதம்!

முன்னாள் பிரதமர் என்ற முறையில் தனக்கு அளிக்கப்பட்ட 14 உதவியாளர்களை மீண்டும் பணி அமர்ந்த வேண்டும் என்று மோடிக்கு மன்மோகன் கடிதம் எழுதி உள்ளார்.

முன்னாள் பிரதமர் என்ற முறையில் தனக்கு அளிக்கப்பட்ட 14 உதவியாளர்களை மீண்டும் பணி அமர்ந்த வேண்டும் என்று மோடிக்கு மன்மோகன் கடிதம் எழுதி உள்ளார்.

மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக மாபெரும் வெற்றிப்பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட14 உதவியாளர்களில் 9 பேரை நீக்கி 5ஆக குறைத்துள்ளது. அதன்படி தற்போது 2 தனி உதவியாளர்கள், ஒரு குமாஸ்தா, 2 பியூன்கள் என 5 பேர் மட்டுமே உள்ளனர். 

இதனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘‘நான் பிரதமராக இருந்தபோது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்கப்பட்ட உதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை.எனவே என்னுடைய உதவியாளரையும் குறைக்காதீர்கள்… என்னைப்போல் நீங்களும் நடந்துகொள்ளுங்கள் மோடி’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்திற்கு 2 வாரங்களுக்கு பிறகு பதிலளித்துள்ள பிரதமரின் முதன்மை செயலாளர் நிர்பேந்திர மிஸ்ரா, உங்களின் கோரிக்கையை பிரதமர் நிராகரித்து விட்டதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தேவையற்ற செலவுகளை குறைக்க மோடி விரும்புவதாகவும். 14 பணியாளர்களை அனுமதித்த நரசிம்ம ராவ் தனது பதவிக்காலத்தின் போது முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும், அமைச்சரவையில் 5 ஆண்டுகள் இருந்து விட்டு சென்ற பிறகு அவர்களுக்கு உரிய பலன்களை அளிக்க வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தார். மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசின் செலவுகளை குறைக்க விரும்பினார். முன்னாள் பிரதமர்களான வாஜ்பாய், நரசிம்ம ராவ், ஐ.கே.குஜ்ரால் ஆகியோருக்கு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்ட ஊழியர்களின் பணி காலத்தை நீடிப்பது உள்ளிட்ட முந்தைய அரசுகளின் நடைமுறைகளை மோடி மாற்றி அமைத்தார். வாஜ்பாய்க்கு கூட 12 உதவியாளர்கள்தான் இருந்தனர் என்பதையும் பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.