நான் உன்ன எப்பவும் மகிழ்ச்சியா வச்சிப்பேன்! காதலியிடன் முகென் கூறிய காதல் வரிகள்! 

 

நான் உன்ன எப்பவும் மகிழ்ச்சியா வச்சிப்பேன்! காதலியிடன் முகென் கூறிய காதல் வரிகள்! 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் அனைவர் மனதிலும் தனி இடம் பிடித்தவர் முகென் ராவ். தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்த முகென், பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் அனைவர் மனதிலும் தனி இடம் பிடித்தவர் முகென் ராவ். தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்த முகென், பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார். பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பன்முக திறமைகளை கொண்டுள்ள முகென் ராவ்வை மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் எல்லோரும் அழைக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் ‘நீதான் நீதான்’ என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ள முகெனுக்கு தீவிரமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. முகென் மலேசியாவில் ஒரு பெண்ணை காதலிப்பதாக பிக்பாஸ் வீட்டில் கூறியிருந்தார். 

 

 

இந்நிலையில் தனது காதலி யாஸ்மின் என்பதை வெளிப்படையாக அறிவித்த முகென், அவரது பிறந்தநாளுக்கு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அத்துடன் கவிதை வரிகளையும் அள்ளித்தெளித்துள்ளார். 

yasmin

அதில், “என்னுள் பாதியே…. என்னைவிட மற்றவர்கள் உனக்கு சிறப்பாக வாழ்த்து தெரிவித்திருக்க முடியும், ஆனால் நான் மட்டுமே உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.