”நான் இல்லாம நீங்க மட்டும் எப்புடி செல்ஃபி எடுக்கலாம்? மரணத்துக்கு அடம்பிடித்த மகள்!

 

”நான் இல்லாம நீங்க மட்டும் எப்புடி செல்ஃபி எடுக்கலாம்? மரணத்துக்கு அடம்பிடித்த மகள்!

எனக்கும் வெள்ளத்தைப் பார்க்கணும், அது மட்டுமல்ல, நாம மூணுபேரும் ஒண்ணா அதே இடத்துல திரும்பவும் ஒரு செல்ஃபி எடுக்கணும் என அடம்பிடித்திருக்கிறார். ஆசைமகள் கேட்கவும், தட்ட மனமில்லாத பெற்றோர் திரும்பவும் மகளை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

மத்திய பிரதேசம் மந்தாசூர் மாவட்டத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் குப்தா என்னும் பேராசிரியர். தன் மனைவியுடன் காலார வாக்கிங் சென்றவர், கனமழை காரணமாக வீட்டிற்கு அருகில் ஓடும் சற்றே பெரிய கால்வாயில் புரண்டோடும் வெள்ளத்தை பார்த்து ரசித்திருக்கிறார். பிறகு கணவன் மனைவி இருவரும் அங்கே இருக்கும் பாலத்தில் மீது நின்றுகொண்டு பின்புலத்தில் வெள்ளம் தெரியுமாறு செல்ஃபி ஒன்றையும் எடுத்துவிட்டு, வீடுவந்து சேர்ந்திருக்கிறார்கள். அதற்குப்பிறகு விதி எப்படி விளையாடிவிட்டது பாருங்கள். வீட்டிற்கு வந்தவுடன், கல்லூரியில் படிக்கும் தங்கள் மகளிடம் தங்களின் செல்ஃபியை காட்டி பெருமை பேசியிருக்கிறார்கள். புரண்டோடும் நீரை கண்டதும் பெரியவர்களுக்கே ஆசை இருக்கும்போது, கல்லூரி மாணவியான இளம்பெண்ணுக்கு இருக்காதா?

Nulla in Mandasur

எனக்கும் வெள்ளத்தைப் பார்க்கணும், அது மட்டுமல்ல, நாம மூணுபேரும் ஒண்ணா அதே இடத்துல திரும்பவும் ஒரு செல்ஃபி எடுக்கணும் என அடம்பிடித்திருக்கிறார். ஆசைமகள் கேட்கவும், தட்ட மனமில்லாத பெற்றோர் திரும்பவும் மகளை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மூவரும் பாலத்தின்மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்கும் அந்த நொடிப்பொழுதில் பாலம் நொறுங்கி கீழே விழவும், மூவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். தகப்பனை உடனடியாக மீட்டுவிட்டனர் அக்கம்பக்கத்தினர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டுசென்றும் தாயை  காப்பாற்ற முடியவில்லை. மகள் உடலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி எல்லாம் சாவு வருது பாருங்க!