நான் இந்து மதத்துக்கு எதிரானவனா? கொந்தளித்த சிவக்குமார்!!

நான் இந்து மதத்துக்கு எதிரானவனா? கொந்தளித்த சிவக்குமார்!!

சமூக வலைத்தளங்களில் தம்மையும், தன் குடும்பத்தினரையும் இந்து மதத்திற்கு எதிராவர்கள் என சிலர் சித்தரிப்‌ப‌தாகவும், ஆனால் நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல என‌ நடிகர் சிவகுமார் விளக்கமளித்துள்ளார். 

நடிகர் சிவகுமாரும் அவரின் குடும்பத்தினரும் இந்து மதத்தினருக்கு எதிரானவர்கள் என்று டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனம் செய்துவந்தனர். குறிப்பாக, புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா பேசிய போது, அது‌‌போன்ற விமர்‌சனங்கள்‌ வலுக்கத் ‌தொடங்‌கின‌
இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தை முன்வைத்து சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் நான் கடவுளுக்கு எதிரானவனா என்ற தலைப்பில் நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐந்து வயது முதல் நான் முருகன் கடவுளை வணங்குகிறேன். தேசத் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி கூட, கடவுள் என்பது வெறும் உணரக்கூடிய விஷயம் மட்டுமே தவிர, அது விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல என்று எப்போதோ கூறியிருக்கிறார். ஆனால், அவரே ஹேராம் என்றும் கூறியிருக்கிறார் என்கிறது வரலாறு. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நான் முருக பக்தன். எங்க வீட்டில் எல்லா சாமி படங்களுமே இருக்கும்.

உண்மையான பக்தி என்பது சாமி கும்பிடுவது மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் நேசித்தலும், அன்பு காட்டுவதும், சரிசமமாக பழகுவதும், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு உதவி செய்தல் ஆகியவைதான் உண்மையான பக்திக்கு அடையாளம். இதைத்தான் அனைத்து மதங்களுமே சொல்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.