நான் இந்திரா காந்தியா? – பிரியங்கா காந்தி விளக்கம்!

 

நான் இந்திரா காந்தியா? – பிரியங்கா காந்தி விளக்கம்!

உணர்ச்சிவசப்படாத பிரியங்கா காந்தியின் மனநிலை, அரசியல் மற்றும் செயல்படும் பாணி ஆகியவை இந்திரா காந்தியிடம் இருந்து மாறுபட்டிருக்கும் என கூறப்பட்டாலும், இந்திராவை போன்று எளிதாக மக்களுடன் கலந்து நிற்கும் திறன் பிரியங்காவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது

கான்பூர்: பிரியங்கா காந்தியை அவரது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டு பேசுவது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

பிரியங்கா காந்தி அடிக்கடி அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் ஒப்பிடப்படுகிறார். அவரது உடை உடுத்தும், பேசும் பாணி, தலைமுடி அலங்காரம் உள்ளிட்டவை இந்திரா காந்தியை போல அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

priyanka, indira

உணர்ச்சிவசப்படாத பிரியங்கா காந்தியின் மனநிலை, அரசியல் மற்றும் செயல்படும் பாணி ஆகியவை இந்திரா காந்தியிடம் இருந்து மாறுபட்டிருக்கும் என கூறப்பட்டாலும், இந்திராவை போன்று எளிதாக மக்களுடன் கலந்து நிற்கும் திறன் பிரியங்காவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இரும்புப் பெண்மணி இந்திராவின் முகத்தில் ஒரு உறுதிப்பாடு தெரியும். ஆனால், மக்களுடன் கலந்துவிட்டால் அவர் அன்பானவராக மாறிவிடுவார். எனவே, அவர் மீது மக்களுக்குப் பிரியம் இருந்தது. அதுபோல தான் பிரியங்காவும். ஆனால், அவர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் விலகியே இருந்தார்.

rahul, priyanka

எனினும், தன்னுடைய சகோதரர் ராகுல் காந்திக்காகவும், தாயார் சோனியா காந்திக்காகவும் மட்டுமே தேர்தல் சமயங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவரை, கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராகவும், காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் அக்கட்சி தலைமை நியமித்தது. பிரியங்காவின் அரசியல் வருகை உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பிற இடங்களிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இதையடுத்து, மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிரியங்கா கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய சிலர், அவரது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டு பேசினர்.

இதையடுத்து கூட்டத்தில் பேசிய பிரியங்கா, இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டால் தாம் ஒன்றுமேயில்லை எனவும், ஆனால் தேசத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இந்திராவின் நோக்கம் தனது இதயத்திலும், தனது சகோதரர் ராகுலின் இதயத்திலும் இருக்கிறது. அதனை எங்களிடம் இருந்து யாரும் அகற்றி விட முடியாது எனவும் தெரிவித்தார்.

இதையும் வாசிங்க

காவல்துறை யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது; பொன்பரப்பி விவகாரத்தில் ஸ்டாலின் காட்டம்!