“நான் அப்படித்தான் செய்வேன், முடிந்ததைச் செய்யுங்கள்”… சமந்தா அதிரடி

 

“நான் அப்படித்தான் செய்வேன், முடிந்ததைச் செய்யுங்கள்”… சமந்தா அதிரடி

சமீபத்தில் ஒரு நேர்காணலில், “திருமணத்திற்குப் பிறகு சற்று கவர்ச்சியான ஆடைகளை  அணிவதில் எதாவது பிரச்னை ஏற்படுமா என்பது தெரியவில்லை” என்று கூறியுள்ளார். தான் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் அணிந்து வரும் உடைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது தான் மிகவும் பயமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

நடிகை சமந்தா, கல்யாணத்திற்கு பிறகு தனது ஆடைத்தேர்வுகள் மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் ஒரு நேர்காணலில், “திருமணத்திற்குப் பிறகு சற்று கவர்ச்சியான ஆடைகளை  அணிவதில் எதாவது பிரச்னை ஏற்படுமா என்பது தெரியவில்லை” என்று கூறியுள்ளார். தான் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் அணிந்து வரும் உடைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது தான் மிகவும் பயமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

samantha 87

ஆனால் அதையெல்லாம் மீறி தனக்கு விருப்பமான ஆடைகளை அணிவதில் அவர் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறார். “எனக்கு நினைவிருக்கிறது, திருமணத்திற்குப் பிறகு நான் மாடர்ன் உடை ஒன்றை அணிந்தபோது மிகவும் மோசமாக ட்ரோல் செய்யப்பட்டேன், அது மிகவும கஷ்டமாக இருந்தது. ஆனால் நான் அதை இரண்டாவது முறையாகச் செய்தபோது, ​​அவ்வளவு மோசமாக விமர்சிக்கப்படவில்லை என்பதைக் கவனித்தேன். எனவே ஒரு முயற்சிக்கு முதல் அடி எடுத்துவைப்பது தான் முக்கியம்.  நான் ஏதோ மிகவும் துணிச்சலான ஒரு செயலைச் செய்துவிட்டேன் என்று சொல்லப் போவதில்லை. ஆனால் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களுக்குப் பயந்தேன். ஆனால் அதே நேரத்தில், இவை கட்டாயம் மாறும், என்னால் இதைச் செய்யமுடியும். முடிந்தவரை அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பேன்”
என்றும் கூறினார்.

samantha-98

சமந்தா தற்போது ஃபேமிலி மேன் சீசன் 2 என்ற வெப் சீரிஸில் நடிப்பது மூலம் இந்தியில் அறிமுகமாக உள்ளார்.  மனோஜ் பாஜ்பாய் நடிக்கும் தி ஃபேமிலி மேன், ஆக்ஷ்ன் ட்ராமா த்ரில்லர் வெப்சீரிஸ்.