நான்கு வழிச் சாலையில் நள்ளிரவில் நடந்த கோர விபத்து: ஒருவர் பலி

 

நான்கு வழிச் சாலையில் நள்ளிரவில் நடந்த கோர விபத்து: ஒருவர் பலி

பண்ருட்டி அருகே நான்குவழி  இணைக்கும் சாலையில் நேற்றிரவு பயங்கர விபத்து ஏற்பட்டது.  

பண்ருட்டி அருகே நான்குவழி  இணைக்கும் சாலையில் நேற்றிரவு பயங்கர விபத்து ஏற்பட்டது. 

ஜெயக்குமார், பரமானந்தம், சிவகுமார், ராஜகாந்தி ஆகிய நால்வரும் வேலையை முடித்து வீடு திரும்பிக்  கொண்டிருந்தனர். சென்னையில் இருந்து தாறுமாறாக  வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது. அதில் அவர்கள் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பாதசாரி ரங்கநாதன் மீது மோதிய லாரி எதிரில் வந்து கொண்டிருந்த காரை இழுத்துச் சென்றது. இதில் ரங்கநாதன் உடல் காரின் அடியில் மாட்டிக்கொண்ட நிலையில் உடல் நசுங்கியது. 

போக்குவரத்து காவலர் ஒருவர் டிப்பர் லாரியை நிறுத்த முற்பட்டும் லாரி நிற்காமல்,காரை இழுத்துக்கொண்டே சென்று சில  மீட்டர் தள்ளி நின்றது. காரில் இருந்தவர்கள் அலறினர். இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவிலிருந்து இன்று வெளியிடப்பட்டது. ஓட்டுனரை கைது செய்த போலீசார் காரில் இருந்த இருவரையும் மீட்டனர். 

accident

காயப்பட்டவர்கள் பண்ருட்டி மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட ஓட்டுநர் ரங்கநாதனிடம் விசாரத்த போது டிப்பர் லாரியின் பிரேக் திடீரெனெ செயல் இழந்ததாகவும், எதிரில் ஒரு பேருந்து வந்ததால் பெரும் ஆபத்து நிகழாமல் இருக்க பிளாட்பாரத்தில் மோதி லாரியை நிற்க முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் லாரி ஓட்டுநர் கூறினார். 

மேலும், கார் மீது லாரி மோதியதால் தான் லாரியின் வேகம் கட்டுப் படுத்தப்பட்டு நின்றதாகவும் அவர்  தெரிவித்தார் என காவல் துறை தெரிவித்துள்ளது. டிப்பர் லாரியின் பிரேக் செயலிழக்கும் அளவுக்கு லாரியின் நிலை மோசமாக உள்ளதால் லாரியின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.