நான்கு வழிச் சாலையமைக்க நெய்வேலி ஆர்ச் இடிக்கப் பட்டது!

 

நான்கு வழிச் சாலையமைக்க நெய்வேலி ஆர்ச் இடிக்கப் பட்டது!

விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை 164 கி.மீ நான்கு வழிச்சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை 164 கி.மீ நான்கு வழிச்சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது, அந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

Neyveli arch

அச்சாலை அமைக்க இடையூறாக இருக்கும் அனைத்து கட்டிடங்களையும் பணியாளர்கள் இடித்து வருகின்றனர். இந்நிலையில், நான்கு வழி சாலை அமைப்பதற்கு இடையூராக இருந்த, பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த  என்.எல்.சியின் அடையாளமான நெய்வேலி ஆர்ச் இடிக்கப் பட்டது. 

இரண்டு ஆர்ச்சுகள் இருந்த நிலையில், ஒன்று இடிக்கப் பட்டு விட்டது. மீதமுள்ள மற்றொரு ஆர்ச் இன்னும் ஓரிரு நாட்களில் இடிக்கப் படும் என தகவல்கள் வெளியாகின்றன.