நான்கு ரியர் கேமராக்கள் கொண்ட சாம்சங் ஏ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

நான்கு ரியர் கேமராக்கள் கொண்ட சாம்சங் ஏ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய ஸ்மார்ட்போன் உலகில் இரட்டை கேமரா, டிரிபிள் கேமரா செட்டப் ஆகியவற்றை கடந்து நான்கு ரியர் கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனும் அறிமுகம் ஆகியுள்ளது. ஆம்…சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதில் தான் நான்கு ரியர் கேமரா செட்டப் அமைந்துள்ளது. இது தவிர, அந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், பின்புறம் விரல்ரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகிய சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் ஆன்லைன் தளம், ஏர்டெல், பே.டி.எம். மால், பிளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (நவ.20) முதல் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனின் விற்பனை இம்மாதம் 28-ஆம் தேதி (நவ.23) தொடங்குகிறது.

sam

குறிப்பிட்ட சில வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ.3000 வரை கேஷ்பேக் பெற முடியும். ஏர்டெல் ஆன்லைன் தளங்களில் கேலக்ஸி ஏ9 (6 ஜி.பி. வேரியன்ட்) ஸ்மார்ட்போனினை ரூ.3,690 முன்பணம் செலுத்தி மாதம் ரூ.2,349 மாத தவணை முறையில் வாங்க முடியும். மேலும் கேலக்ஸி ஏ9 (8 ஜி.பி. வேரியன்ட்) ஸ்மார்ட்போனை ரூ.4,890 முன்பணம் செலுத்தி, ரூ.2,449 மாத தவணை வசதியுடன் பெற முடியும்.

மாத தவணையுடன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் வழங்கப்படுகிறது. இதனுடன் டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், ஏர்டெல் டி.வி. ஆப் இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 1080×2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்

அட்ரினோ 616 GPU

– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்

– 128 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ

டூயல் சிம் ஸ்லாட்

– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture

– 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4

– 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா

– 5 எம்.பி டெப்த் கேமரா

– 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0

கைரேகை சென்சார்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

sam 4

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் கேவியர் பிளாக், லெமனேட் புளு மற்றும் பபுள்கம் பின்க் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. ரேம் வேரியன்ட் விலை ரூ.36,990 என்றும், 8 ஜி.பி. ரேம் வேரியன்ட் விலை ரூ.39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.