நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் குறைந்தது தங்க விலை !

 

நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் குறைந்தது தங்க விலை !

மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த நான்கு நாட்களாக அதிரடியாக சுமார் ரூ.488 வரை உயர்ந்தது.

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த நான்கு நாட்களாக அதிரடியாக சுமார் ரூ.488 வரை உயர்ந்தது. அதனையடுத்து இன்று மீண்டும் தங்க விலை குறைந்துள்ளது. 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,697க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,576க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 69 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.600 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,400க்கு விற்கப்படுகிறது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வெள்ளி விலை 50 ரூபாயை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.