நான்கு கேமரா கொண்ட லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

 

நான்கு கேமரா கொண்ட லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அந்நிறுவனத்தின் லெனோவோ எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஐ போர்டிரெயிட் வசதி, 3டி லைட்டிங், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:7:9 டிஸ்ப்ளே

ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்

அட்ரினோ 512 GPU

– 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ZUI 10

– 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8

– 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6

– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX476 சென்சார், f/2.2

– 8 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா

விரல்ரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1198 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.12,275), 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,300) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1498 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,350) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.