நான்காவது நாளாகக் குறைந்தது தங்க விலை !

 

நான்காவது நாளாகக் குறைந்தது தங்க விலை !

இந்த மாத தொடக்கம் முதல் ரூ.29 ஆயிரத்திற்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கடந்த 3 ஆம் தேதி அதிரடியாக உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை எட்டியது.

இந்த மாத தொடக்கம் முதல் ரூ.29 ஆயிரத்திற்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கடந்த 3 ஆம் தேதி அதிரடியாக உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர், தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, கடந்த செப்டம்பர் மாத உச்சத்தை வீழ்த்தி புதிய உச்சத்தை அடைந்தது. அதனையடுத்து கடந்த நான்கு நாட்களாகத் தங்க விலை குறைந்து கொண்டே வருகிறது. 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,801க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.30,408க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.200 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,400க்கு விற்கப்படுகிறது.