நானேதான் வாங்கினேன்… பா.ஜ.க நிர்ப்பந்தம் இல்லை… எம்.பி சீட் பற்றி ஜி.கே.வாசன் பேட்டி

நானேதான் வாங்கினேன்… பா.ஜ.க நிர்ப்பந்தம் இல்லை… எம்.பி சீட் பற்றி ஜி.கே.வாசன் பேட்டி

மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி சீட் வேண்டும் என்று தே.மு.தி.க ஒற்றைக்காலில் நின்ற நிலையில் தா.ம.க-வுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. 

தனக்கு எம்.பி சீட் கிடைத்ததில் பா.ஜ.க தலையீடு இல்லை, அ.தி.மு.க-வே முடிவு செய்து வழங்கியுள்ளது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி சீட் வேண்டும் என்று தே.மு.தி.க ஒற்றைக்காலில் நின்ற நிலையில் தா.ம.க-வுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. 
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூலமாக ஆர்.எஸ்.எஸ் வழியாக அழுத்தம் கொடுத்து வருகிறார் ஜி.கே.வாசன்… அதனால் அவருக்கு எம்.பி சீட் உறுதியாகிவிட்டது என்று நீண்ட நாட்களாகவே நம்முடைய டாப் தமிழ் நியூஸ் கூறிவந்தது. நம்முடைய செய்தியின்படியே அவருக்கு சீட் கிடைத்துள்ளது.

gk vasan

இந்த நிலையில் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் தனக்கு எம்.பி சீட் கிடைத்தது பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணியில் த.மா.க கடைசியாக சேர்ந்தது. இதனால் மக்களவைக்கு ஒரே ஒரு சீட் ஒதுக்கினார்கள். அதனால், மாநிலங்களவை சீட் கேட்டு வந்தோம். மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மீண்டும் அ.தி.மு.க-விடம் அந்த கோரிக்கையை முன் வைத்தோம். அதன் அடிப்படையில்தான் எங்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. எனக்கு எம்.பி சீட் கிடைக்க டெல்லி பா.ஜ.க தலைமை உதவியதாக கூறுவதில் உண்மை இல்லை. தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத அவர்கள் தயவால் எம்.பி சீட் பெற்றேன் என்று கூறுவது தவறு. இது முற்றிலும் அ.தி.மு.க-வின் முடிவு. அதேபோல் நான் பா.ஜ.க-வில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள். அதிலும் உண்மை இல்லை” என்றார்.