‘நானும் கவினும் உண்மையில் காதலிக்கவில்லை’ : ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் லாஸ்லியா ட்வீட்!

 

‘நானும் கவினும் உண்மையில் காதலிக்கவில்லை’ : ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் லாஸ்லியா ட்வீட்!

விரைவில் தங்கள் திருமணம் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் இவர்களின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். 

பிக் பாஸில் கவினும் நானும் காதலிப்பது போல நடிக்க தான் செய்தோம் என்று லாஸ்லியா கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

losliya

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். ஆட்டம், பாட்டம், மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார். கவின் லாஸ்லியா  காதலுக்கு சமூக வலைதளங்களில் அமோக ஆதரவு உள்ளது. அவர்கள் விரைவில் தங்கள் திருமணம் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் இவர்களின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். 

losliya

இந்நிலையில் லாஸ்லியா கவினுடனான காதல் குறித்து  கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், ‘பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு நாடகம். அதில் நாங்கள் அனைவரும் நடிக்க தான் செய்தோம். கவினையும் என்னையும் ஒன்றாக்கி பதிவிடாதீர்கள்’ என்று கூறியுள்ளதாகச் செய்திகள் உலா வருகின்றன.  ஆனால்  இதன் உண்மை தன்மை இன்னும் உறுதியாகவில்லை.

kavin

முன்னதாக பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கவினிடம்  லாஸ்லியா காதல் குறித்து கேட்டபோது, எனக்கு பொறுப்புகள் உள்ளது. வேறேதும் யோசிக்க நேரம் இல்லை’ என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் கவின் லாஸ்லியா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.