நானும் இந்துதான் என கொரோனா நிவாரணம் கேட்டவரை ஈ.வே.ரா கோஷ்டி என திட்டித்தீர்த்த எச்.ராஜா! – வைரல் ஆடியோ

 

நானும் இந்துதான் என கொரோனா நிவாரணம் கேட்டவரை ஈ.வே.ரா கோஷ்டி என திட்டித்தீர்த்த எச்.ராஜா! – வைரல் ஆடியோ

பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை முருகன் என்பவர் தொடர்புகொண்டு கொரோனா நிவாரண உதவி பற்றி கேள்வி எழுப்பிய ஆடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. முருகன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாத எச்.ராஜா தந்தை பெரியார், திராவிட இயக்கங்களைத் திட்டித் தீர்ப்பது வேடிக்கையாக உள்ளது.

கொரோனா நிவாரண உதவி பற்றி கேள்வி கேட்டவரை ஈ.வே.ரா கோஷ்டி என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா திட்டித்தீர்த்த ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 
பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை முருகன் என்பவர் தொடர்புகொண்டு கொரோனா நிவாரண உதவி பற்றி கேள்வி எழுப்பிய ஆடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. முருகன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாத எச்.ராஜா தந்தை பெரியார், திராவிட இயக்கங்களைத் திட்டித் தீர்ப்பது வேடிக்கையாக உள்ளது. ஆடியோ விவரம் வருமாறு:
எச்.ராஜா: ஹலோ
முருகன்: ஐயா வணக்கம். என் பெயர் முருகன். சென்னையிலிருந்து பேசுறேன். 
எச்.ராஜா: சொல்லுங்க.
முருகன்: நானும் இந்துதான். ஏற்கனவே 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏதும் நிவாரணம் கொடுக்குமா… (பேச்சை முடிக்கவில்லை)
எச்.ராஜா: ஏங்க இதுவரைக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி கொடுத்திருக்கிறது. நிவாரணம் கொடுக்க முடியாதா? ஏன் இந்த மாதிரி கேட்கிறீங்க. 
முருகன்: இருங்க சார், நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை….
எச்.ராஜா: உங்களுக்கு எல்லாம் மோடியை திட்டித் தீர்க்கனும் என்பதை தவிர இந்த தமிழ்நாட்டில, ஈ.வே.ரா காரங்களுக்கு புத்தியே தவிர, வேற நல்ல புத்தியே இல்லைங்க… ஐஎம் வெரி சாரி.
முருகன்: நான் ஃபஸ்ட்லயே சொல்லிட்டேன். நானும் இந்துதான். மோடியை பத்தியும் பேசலை, ஈ.வே.ரா பத்தியும் பேசவில்லை.
எச்.ராஜா: நாசமா பேற இந்த ஈ.வே.ரா, தேச விரோதத்தை வளர்த்து, வெள்ளைக்காரனுக்கு ஆதரவா இருந்து, தமிழ்நாட்டைப் பூரா…
முருகன்: ஏங்கா திரும்பத் திரும்ப ஏன் அவருகிட்டயே போறீங்க?
எச்.ராஜா: பின்ன என்னங்க ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி அறிவிச்சிருக்கு, நாளைக்குத் திரும்ப அறிவிக்கிறேன்னு சொல்லியிருக்கார், ஏங்க சும்மா பொய்யே பேசிக்கிட்டு இருக்கீங்க” என்ற வகையில் உரையாடல் நீண்டுகொண்டே செல்கிறது.
கேள்விகேட்டாலே எச்.ராஜாவுக்கு ஆதாது, அதிலும் மத்திய அரசுக்கு எதிராக கேள்வி இருந்துவிட்டால் அவருடைய கொந்தளிப்பு அடங்கவே நேரம் எடுக்கும்… அப்படி இருக்கும் போது நானும் இந்துதான் என்று நிவாரண உதவி கேட்டவரை எச்.ராஜா திட்டித் தீர்த்தது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.