நானும்தான் நாலு லாங்குவேஜ் பேசுவேன்…துரை முருகன் பாணியில் களம் இறங்கிய எதிர்க்கட்சி வேட்பாளர்!

 

நானும்தான் நாலு லாங்குவேஜ் பேசுவேன்…துரை முருகன் பாணியில் களம் இறங்கிய எதிர்க்கட்சி வேட்பாளர்!

துரைமுருகனை தொடர்ந்து நாகை  அதிமுக வேட்பாளரும் ஆங்கிலம் பேசுவது குறித்துக் கூறியுள்ளது விவாத பொருளாக மாறியுள்ளது. 

நாகை: துரைமுருகனை தொடர்ந்து நாகை  அதிமுக வேட்பாளரும் ஆங்கிலம் பேசுவது குறித்துக் கூறியுள்ளது விவாத பொருளாக மாறியுள்ளது. 

அனல் பறக்கும் பிரச்சாரம்

admk dmk ttn

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே, தமிழக தேர்தல் களம்  சூடுபிடிக்கத்  தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் என்று சொல்லக்கூடிய அதிமுக திமுக ஆகிய கட்சிகள் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முதல் அனல் பறக்கும் பிரச்சாரம் வரை  பரபரப்பாகச் செயல்பட்டு வருகின்றது. 

நாகை அதிமுக  வேட்பாளர்

saravanan

இந்நிலையில் நாகையில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள்  கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாகை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் சரவணனை அமைச்சர் காமராஜ்  அறிமுகப்படுத்தி மக்கள் முன்னிலையில் பேசினார்.

4 மொழிகளில் பேசி அசத்திய சரவணன்

saravanan

இதை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அதிமுக வேட்பாளர் சரவணன், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் பேசி அசத்தினார். மேலும், ‘நாடாளுமன்றத்தில் சமயத்துக்கு ஏற்ப தேவைப்படும் மொழியில் பேசி மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பேன்’ என்றார். 

பிள்ளையார் சுழி போட்ட துரைமுருகன்

duraimurugan

பொதுவாக தேர்தல் பரப்புரையில் பேசுபவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தால் அவர்கள் ஆட்சிக் காலத்தில் செய்த நலத்திட்டங்களை குறித்தும்,  எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளுங்கட்சியைக் குறை கூறியுமே வாக்கு  சேகரிப்பர். ஆனால்  இந்த முறை மொழியை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வருகின்றனர். 

இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுக பொருளாளர் துரைமுருகன் தான். எப்படி என்று கேட்கிறீர்களா? துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் திமுக வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். தன் மகனுக்காக பரப்புரை செய்த துரைமுருகன், என் மகன் போல யாராலும் இங்கிலீஷ் பேச முடியாது.  என்று கூறினார்.  தமிழை உயிர் மூச்சாக கொண்டுள்ளது திராவிட கட்சி என்று மார்த்தட்டி கொள்ளும் முக்கிய நிர்வாகி ஒருவர் ஆங்கில மொழியை உயர்த்தி பேசுவது சமூகவலைதள வாசிகளால் விமர்சிக்கப்பட்டது.  இவரை தொடர்ந்து நாகை அதிமுக வேட்பாளர் சரவணனும்  எனக்கு நான்கு மொழிகள் தெரியும் என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதெல்லாம்  ஒரு தகுதியா பேசிட்டு இருக்கீங்களே!?

dmk

‘மொழி தெரிஞ்சி என்ன புண்ணியம், முதல்ல மக்களுடைய குறைகளை தெரிஞ்சிக்கவும்,  எடுத்து சொல்லவும் பழகிக்கோங்க.முதல்ல நம்ம மொழில ஒழுங்கா பேசுங்கய்யா.. அதவிட்டுட்டு  இங்கிலீஷ் பேசுறதெல்லாம் ஒரு தகுதியா பேசிட்டு இருக்கீங்களே?!’ என்று நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.