“நானா இருந்தா செருப்பால அடிச்சி இருப்பேன்” தர்ஷனை வெளுத்து வாங்கிய வனிதா

 

“நானா இருந்தா செருப்பால அடிச்சி இருப்பேன்” தர்ஷனை வெளுத்து வாங்கிய வனிதா

சாண்டியின்  முன்னாள் மனைவி காஜல் உள்பட பலரும் சனம்  ஷெட்டிக்கு ஆதரவாக தான் பேசி வருகிறார்கள். 

சனம் ஷெட்டி – தர்ஷன் விவகாரத்தில் பலரும் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.  குறிப்பாக  சாண்டியின்  முன்னாள் மனைவி காஜல் உள்பட பலரும் சனம்  ஷெட்டிக்கு ஆதரவாக தான் பேசி வருகிறார்கள். 

ttn

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார்  பேட்டி ஒன்றில், ‘தர்ஷன் எனக்கு பிரதர். நான் அவனை திட்டி இருக்கேன். திட்டுவேன். இந்த விஷயத்தை தான் நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளையே  சொன்னேன். அவங்க அவங்க வேலையா பார்த்த பிரச்சனை இல்லை. அப்படி இருந்து இருந்தா சாக்ஷிக்கு அப்படி நடந்து இருக்காது, கவின் – லாஸ்லியா பிரச்னை  ஓடியிருக்காது. தர்ஷன் எனக்கு ஒரு பெண் இருக்கான்னு அவ சொல்லுறான்.

ttn

அதனால தான் நான் கோபப்பட்டேன். என் கணவன் வேலைக்கு  போகும் போது  நம்பி அனுப்புறோம். அந்த பொறுப்புணர்ச்சி  தர்ஷனுக்கு இருக்கனும். நானும் கூட ராபர்ட்டுக்காக 1 கோடி செலவு பண்ணி ஒருபடம் எடுத்து வெளியிட்டேன். அதே தான் தர்ஷனுக்காக சனம்  செஞ்சிருக்கா. அதனால் எனக்கு அந்த பொண்ணு மேல ஒரு மரியாதை இருக்கு’ என்றார்.

ttn

தொடர்ந்து பேசிய அவர், ‘அந்த பொண்ணு மேல தப்பே  இருந்தாலும் கேமிரா முன்னாடி அந்த பொண்ணு பத்தி தப்பா பேசியிருக்க கூடாது. சினிமா நடிகை , ம***, அவள் பிகினி போட்டுருக்கா  அதெல்லாம் முன்னாடி தெரியதா? அவன் உன் பொண்டாட்டியே  இல்லை. எனக்கு சனம் பார்த்தா பாவமா இருக்கு. இதற்கெல்லாம் பல காரணம் இருந்தது, இருக்கு.  தர்ஷனுக்கு கல்யாணம் என்னனு தெரியாம நிச்சயதார்த்தம் பண்ணனான்னு தெரியல. பொஸசிவ்வா இருக்கா சனம்  அப்படினு சொல்லுறானே? என்கிட்ட அப்படிலாம் சொன்ன செருப்பால அடிப்பேன், பொஸசிவ்வா இல்லாம பொண்டாட்டி ஊர் மேய விடுவாளா? மொத்தத்துல இது தப்பு’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.