நானாவுக்கு பதில் ராணா: மீ டூ விவகாரத்தால் ‘ஹவுஸ்ஃபுல் 4’-ல் அதிரடி மாற்றம்!

 

நானாவுக்கு பதில் ராணா: மீ டூ விவகாரத்தால் ‘ஹவுஸ்ஃபுல் 4’-ல் அதிரடி மாற்றம்!

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகவுள்ள ‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தின் நானா பட்டேகருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் ராணா ஒப்பந்தமாகியுள்ளார்.

மும்பை: அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகவுள்ள ‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தின் நானா பட்டேகருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் ராணா ஒப்பந்தமாகியுள்ளார்.

மீ டூ விவகாரத்தில் தனுஸ்ரீ தத்தாவால் குற்றம்சாட்டப்பட்ட பாலிவுட் நடிகர் நானா பட்டேகர் ‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தில் கஸல் ஆர்ட்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவரது காட்சிகள் ஜெய்சால்மரில் படமக்கப்பட்ட நிலையில், அவர் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து, படத்தில் இருந்து விலகினார்.

நடிகர் நானா பட்டேகரை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குநரான சாஜித் கான் மீதும் பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்த நிலையில், அவருக்கு பதிலாக இப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதிய ஃபர்ஹத் சாம்ஜி இயக்குநாராகியுள்ளார். இவரது இயக்கத்தில் நானா பட்டேகர் நடித்த காட்சிகளில் ராணா நடித்து வருகிறார்.

இதனை நடிகர் ராணா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் மும்பையில் ‘ஹவுஸ்ஃபுல் 4’ ஷூட்டிங்கில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். இப்படத்தில் அக்ஷய்குமார், ரித்தேஷ் தேஷ்முக், க்ரித்தி சனோன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, க்ரித்தி கர்பாந்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.