நாட்டை எப்படி உடைக்கலாம், வெறுப்பை எப்படி பரப்பலாம் என மோடி கற்பித்தார்- ராகுல் காந்தி கடும் தாக்கு

 

நாட்டை எப்படி உடைக்கலாம், வெறுப்பை எப்படி பரப்பலாம் என மோடி கற்பித்தார்- ராகுல் காந்தி கடும் தாக்கு

நாட்டை எப்படி உடைக்கலாம், எப்படி வெறுப்பை பரப்பலாம் என பிரதமர் நரேந்திர மோடி கற்பித்தார் என ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு

டெல்லியில் நேற்று மகாத்மாக காந்தியின் நினைவிடம் ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஒற்றுமைக்காக சத்தியாகிரகம்’ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது:

மோடி

நாட்டை எப்படி உடைக்கலாம், வெறுப்பை எப்படி பரப்பலாம் என்பதை மோடி கற்பித்தார். அதில் அவர்தான் நம்பர் ஒன். நம் எதிரிகளால் செய்ய முடியாததை, தற்போது நரேந்திர மோடி செய்கிறார் நமது வளர்ச்சியை தடுக்கிறார். மாணவர்களின் குரல்களை ஏன் நசுக்கிறீர்கள் மற்றும் அவர்களால் ஏன் வேலை வாய்ப்புகளை பெற முடியவில்லை என்பதற்கு மோடி கட்டாயம் பதில் சொல்ல வேண்டும். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்களின் குரல் அரசியலமைப்பில் உள்ளது. அதனை நீங்கள் தாக்க முடியாது. நாடு உங்களை தடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.