நாட்டைவிட்டு வெளியேறுங்கள்… சர்ச்சையைக் கிளப்பிய ராஜ் தாக்கரே பேனர்

நாட்டைவிட்டு வெளியேறுங்கள்… சர்ச்சையைக் கிளப்பிய ராஜ் தாக்கரே பேனர்

மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச குடிமக்கள் தாங்களாக வெளியேற வேண்டும், இல்லை என்றால் வெளியேற்றப்படுவீர்கள் என்று பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச குடிமக்கள் தாங்களாக வெளியேற வேண்டும், இல்லை என்றால் வெளியேற்றப்படுவீர்கள் என்று பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

raj-thackeray-banner-01

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா சார்பில் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், “வங்கதேசத்தினரே நாட்டைவிட்டு வெளியேறுங்கள். இல்லையென்றால் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா பாணியில் வெளியேற்றப்படுவீர்கள்” என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது. பல இடங்களில் இது போஸ்டராகவும் ஒட்டப்பட்டு இருந்தது.

மகாராஷ்டிராவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வலியுறுத்தி மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா சார்பில் வருகிற 9ம் தேதி பேரணி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
பேரணி குறித்து பேசிய ராஜ்தாக்கரே, “குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றிய விவாதம் ஒருபுறம் இருக்கலாம். எதற்காக எங்கிருந்தோ வந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு நாம் அடைக்கலம் கொடுக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியிரந்தார். இதையொட்டியே அவரது ஆதரவாளர்கள் போஸ்டர், பேனர்களை வைக்க ஆரம்பித்துள்ளனர்.