நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்: கல்லூரி மாணவன் கைது

 

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்: கல்லூரி மாணவன் கைது

தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த  தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜ் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராவில், அண்ணா மேம்பாலத்தில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சாலையின் தடுப்பு சுவருக்கு மறுபுறம் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசு முயற்சிக்கின்றனர். ஆனால் தவறுதலாக நாட்டுவெடிகுண்டு கார் மீது படாமல் சாலையில் விழுந்து வெடித்தது. நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

நாட்டு வெடிகுண்டு

இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசிய 2 பேர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் தி.நகரைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருடையது என காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஆனால் அவரது மகன் பைக்கை பயன்படுத்தி வந்ததும் தேனாம்பேட்டை சம்பவத்திற்கு பிறகு தலைமறைவானதும் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தேவதாஸை பிடித்து போலீசார் விசாரித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உறவினர் வீட்டில் கல்லூரி மாணவன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து தனிப்படை போலீசார் சென்று பிடித்து சென்னை கொண்டு வந்துள்ளனர். தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர் நந்தனம் அரசுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் எதற்காக காரை தாக்க முயற்சித்தினர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.