நாட்டு மக்களிடம் சந்திரயான்-2 திட்டம் குறித்து மோடி உரை!

 

நாட்டு  மக்களிடம் சந்திரயான்-2 திட்டம் குறித்து மோடி உரை!

விண்கலமானது  ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நிலவின் பாதைக்குத் திருப்பி விடப்பட்டது.

பெங்களூரு: இஸ்ரோ மையத்திலிருந்து பிரதமர் மோடி இன்று காலை 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

isro

இஸ்ரோ கடந்த ஜூலை 22ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காகச்  சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலமானது  ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நிலவின் பாதைக்குத் திருப்பி விடப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலவின் சுற்று வட்டப் பாதையில் சந்திரயான்-2-வின் வேகம் படிப்படியாக  குறைக்கப்பட்டு,  கடந்த 2ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கப்பட்டது.ஆனால்  எதிர்பாராத விதமாக லேண்டரில்  இருந்து சிக்னல்  வரவில்லை. இதனால் அதன் தகவல் தொடர்பு  துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இதனால் விஞ்ஞானிகள் வருத்தமடைந்தனர். அவர்களுக்குப்  பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

இந்நிலையில்  இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.  விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை அளித்து ஆறுதல் கூறிய மோடி, இத்திட்டம் குறித்து மக்களிடம் உரையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.