நாட்டுத்துப்பாக்கி வெடித்து 16 வயது சிறுவன் பலி..!

 

நாட்டுத்துப்பாக்கி வெடித்து 16 வயது சிறுவன் பலி..!

பெரும்பாலும் நாட்டுத்துப்பாக்கிகளை வனப்பகுதியில் உள்ளவர்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்துவர்

பெரும்பாலும் நாட்டுத்துப்பாக்கிகளை வனப்பகுதியில் உள்ளவர்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்துவர். அதே போல், கடந்த 24 ஆம் தேதி முள் பாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளைச் சேர்ந்த 7பேர் வேலூர் மாவட்டத்தை அடுத்த கருத்த மலைப்பகுதிக்குள் விலங்குகளை வேட்டையாட அனுமதியின்றி நுழைந்துள்ளனர். 7 பேரில் ஒருவனான துளசிவேந்தன் என்ற 16 வயது சிறுவன், வேட்டையாடக் கையில் நாட்டுத்துப்பாக்கியுடன் சென்றுள்ளான். 

 துளசிவேந்தன்

மலைப்பாதை ஏறுகையில், அவனது கையிலிருந்த நாட்டுத்துப்பாக்கி அருகே இருந்த செடிக்குள் சிக்கியுள்ளது. அதனை மீட்க முயன்ற போது அந்த நாட்டுத்துப்பாக்கி வெடித்துச் சிதறியுள்ளது. துப்பாக்கியிலிருந்த குண்டுகள்  துளசிவேந்தன் தலையில் வேகமாகப் பட்டதில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். உடனே, துளசிவேந்தனுடன் இருந்த 6 பெரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

 துளசிவேந்தன்

தகவல் அறிந்த சிறுவனின் உறவினர்கள் அப்பகுதி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதனையடுத்து, காவல்துறையினர் அத்துமீறி காட்டுக்குள் நுழைந்த 7 பேரில் 2 பேரைக் கைது செய்துள்ளனர். செடியில் சிக்கிய துப்பாக்கி எப்படி வெடித்துச் சிதறும்? , துளசிவேந்தனுடன் சென்றவர்கள் ஏதேனும் செய்திருப்பார்களா? ஏன் அவர்கள் தப்பியோட வேண்டும்? என்ற கோணத்தில், சிக்கிய இவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய 4 பேரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.