நாட்டுடைமையாக்கப்பட்ட ஏழு தமிழ் அறிஞர்களின் நூல் : தமிழக அரசு அரசாணை

 

நாட்டுடைமையாக்கப்பட்ட ஏழு தமிழ் அறிஞர்களின் நூல் : தமிழக அரசு அரசாணை

தமிழில் மிகச்சிறந்த அறிஞர்களின் படைப்புகளை வெளியிடும் உரிமையை ஏற்றுத் தமிழக அரசு இதுவரை 149 கவிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

தமிழில் மிகச்சிறந்த அறிஞர்களின் படைப்புகளை வெளியிடும் உரிமையை ஏற்றுத் தமிழக அரசு இதுவரை 149 கவிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. அந்த வரிசையில் நடப்பாண்டிடில் ஏழு கவிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ttn

அதில், எம்,ஜி ஆர் படங்களுக்குப் பாடல் எழுதிய கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம், யுனெஸ்கோ விருது பெற்ற கவிஞர் நா.காமராசு, பாரதி தாசன் பற்றி நூல் எழுதிய கவிஞர் இளவரசு, தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய தமிழறிஞர் அடிகளாசிரியர், தமிழின் தனித் தன்மையை நூலாக எழுதிய புலவர் இறைக்குருவனார், பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றி எழுதிய பண்டிதர் கோபாலகிருஷணன், குழந்தைகளுக்காக எழுதிய பாபநாசன் குறள் பித்தன் ஆகிய 7  கவிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

ttn

மேலும், ஏழு கவிஞர்களின் வாரிசுகளுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.35 லட்சத்தைப் பரிவுத்தொகையாகச் செலுத்தி அவர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அந்த பரிவுத் தொகையைப் பெற அவர்கள் வந்து போகும் செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.