நாட்டுக்காக உயிர் தியாம் செய்தவர்களை அவமதித்து விட்டார் உத்தவ் தாக்கரே- பா.ஜ.க. தாக்கு

 

நாட்டுக்காக உயிர் தியாம் செய்தவர்களை அவமதித்து விட்டார் உத்தவ் தாக்கரே- பா.ஜ.க. தாக்கு

முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜாமியா பல்கலைகழக சம்பவத்தை ஜாலியன்வாலா பாக் படுகொலையுடன் ஒப்பிடு செய்தது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து தியாகிகளுக்கும் பெரிய பெரிய அவமரியாதை என மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

டெல்லி ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறின. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ஜாலியன் வாலா பாக் படுகொலை

சிவ சேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே இந்த சம்பவம் குறித்து கூறுகையில், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது என கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ.க. கடும் ஆட்சேபம் தெரிவித்தது. குறிப்பாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டிவிட்டரில் உத்தவ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ் இது தொடர்பாக டிவிட்டரில், முதல்வர் உத்தவ் ஜி தாக்கரே ஜாமியா பல்கலைகழக சம்பவத்தை ஜாலியன்வாலா பாக் படுகொலையை ஒப்பிட்டு செய்தது  நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து தியாகிகளுக்கும் பெரிய பெரிய அவமரியாதை.  பல்கலைகழக வளாகத்தில் ஒலித்த வார்த்தைகளை உத்தவ் ஜி ஏற்றுக்கொள்கிறாரா என்பதை நாடு மற்றும் மகாராஷ்டிரா மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பதிவு செய்து இருந்தார். மேலும் டிவிட்டரில் பல்கலைகழக வளாகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஒலித்த வார்த்தைகள் அடங்கிய வீடியோவையும் பதிவு செய்து இருந்தார்.