நாட்டில் விற்பனையாகும் 37 மருந்துகள் தரமற்றவை.. வெளியான அதிர்ச்சி தகவல் !

 

நாட்டில் விற்பனையாகும் 37 மருந்துகள் தரமற்றவை.. வெளியான அதிர்ச்சி தகவல் !

நாட்டில் விற்பனையாகும் அனைத்து மருந்துகளையும் மாதந்தோறும் மாநில மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்து வருகின்றன.

நாட்டில் விற்பனையாகும் அனைத்து மருந்துகளையும் மாதந்தோறும் மாநில மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்து வருகின்றன. அந்த ஆய்வில் மருந்து தரமற்றது என்று தெரிய வந்தால், உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மேற்கொண்ட ஆய்வில், 36 மருந்துகள் தரமற்றவை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. 

ttn

அதனைத் தொடர்ந்து, இந்த மாதமும் 1,158 மருந்துகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதில், 1,121 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டு, 37 மருந்துகள் போலியானது மற்றும் தரமற்றவை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.அந்த 37 மருந்துகளும் கிருமித் தொற்று, தொண்டைப் புண்,காய்ச்சல், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் என்றும் அதனை ஆந்திரா, மகாராஷ்டிரா, ஹிமாச்சலபிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதாகவும்  மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அந்த போலி மருந்துகள் குறித்து முழு அறிவிப்பும்  cdsco.gov.in  என்ற இந்த இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தகவல்  மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.