நாட்டில் சிலர் வெறுப்பை உருவாக்க முயற்சி செய்கின்றனர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் குற்றச்சாட்டு

 

நாட்டில் சிலர் வெறுப்பை உருவாக்க முயற்சி செய்கின்றனர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் குற்றச்சாட்டு

நாட்டில் சிலர் வெறுப்பை உருவாக்க முயற்சி செய்வதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குற்றச்சாட்டியுள்ளார்.

தசரா விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாக்பூரில் இன்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் தசரா விழாவை கொண்டாடுகிறது. இன்று காலை 7.40 மணிக்கு விஜயதசமி நிகழ்ச்சி தொடங்கியது. தசரா விழாவில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில் கூறியதாவது:

அமித் ஷா, மோடி
 
இவ்வளவு பெரிய நாட்டில் 2019 தேர்தல்கள் சுமூகமாக நடைபெறுமா என்பதை தெரிந்து கொள்ள உலகமே ஆர்வமாக இருந்தது. நம் நாட்டில் ஜனநாயகம் என்பது இறக்குமதி செய்யப்பட்டது அல்ல. பல 100 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் சிலர் வெறுப்பை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பணிகள் பாராட்டுக்குரியது. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கை,  எதிர்பார்ப்புகளையும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் மற்றும் நாட்டின் நலனுக்காக எதையும் செய்யும் தைரியம் இருப்பதை ஒரு முறை நிருபித்து உள்ளது. 

எல்லை பாதுகாப்பு

2019 தேர்தலில் புதிய அரசை கூடுதல் இடங்களுடன் தேர்ந்தெடுத்து இருப்பது அரசின் முந்தைய செயல்பாடுகளுக்கு நாடு ஒப்புதல் அளித்துள்ளதையும், எதிர்காலத்துக்கான ஏராளமான எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் எல்லைகள் முன்பே காட்டிலும் பாதுகாப்பாக உள்ளது இருப்பினும் கடற்பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியமாகும். கார்ட்ஸ், நில எல்லைகளில் செக் போஸ்ட்ஸ் மற்றும் கடல் எல்லை முழுவதும் குறிப்பாக தீவுகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தேவந்திர பட்னாவிஸ்

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்கள், மகாராஷ்டிரா முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.