நாட்டில் இவ்வளவு பிரியாணி பிரியர்களா?! அதிகரிக்கும் foodies!  அதிர்ச்சி தகவல்! 

 

நாட்டில் இவ்வளவு பிரியாணி பிரியர்களா?! அதிகரிக்கும் foodies!  அதிர்ச்சி தகவல்! 

இன்னைக்கு  ‘ஆன் லைன்’ ஆர்டர் எடுத்து உணவு சப்ளை செய்வதில் உலகம் முழுக்கவே  ஸ்விக்கி கிளை பரப்பி பட்டையைக் கிளப்பும் நிறுவனம். பாப்புலாராக  இருக்கிறது என்பது எவ்வளவு  உண்மையோ அதே அளவுக்கு பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லை ! இது ஒரு பக்கம் இருக்கட்டும்.மீடியாவில் ஒவ்வொரு வருடமும் கடந்து வந்த  நிகழ்வுகளில் முக்கியமானவற்றை ரீவைண்ட் பண்ணி ஒரு மினி ட்ரெய்லர் வெளியிடுவது வழக்கம்.அதே போல் ஸ்விக்கியும் ஒரு டேட்டாவை ரிலீஸ் பண்ணியிருக்கிறது.அதில் தங்களுக்கு வந்த ஆர்டர்களில் எந்தெந்த உணவு வகைகளை மக்கள் அதிகம் விரும்பி ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் டாப் லிஸ்டில் இருக்கிறது பிரியாணி ஐட்டம்.

briyani

குறிப்பாக இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து வாங்கும் உணவு வகைகளில்  ‘பிரியாணிதான் முன்னிலையில் இருப்பதாக  பிரபல ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனமான ‘ஸ்விக்கி’ தெரிவித்துள்ளது! ‘சில நாட்களில் ஒரு நிமிடத்தில் 95 பிரியாணி ஆர்டர்கள் கூட வருமாம். 

kichadi

தவிர, கிச்சிடியின் ஆர்டர்களும் வருவதாகவும் தெரிவித்துள்ளது. கிச்சிடியின் ஆர்டர்கள் இந்த ஆண்டு 128 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்திருக்கிறது.பெரும்பாலும்  சிக்கன்  பிரியாணியைத்தான் அதிகளவில் விரும்புகிறார்களாம். அதே சமயம் அவர்கள் பீஸ்ஸாவில் சீஸ், ஆனியன், கேப்ஸிகம், மஷ்ரூம், கார்ன்,பன்னீர்,ஆலீவ்ஸ்,ஜலபினோஸ் போன்றவற்றையும் அதிகம் டாப்பிங்ஸ்களாக பிஸ்ஸா ஆர்டர் செய்வதுண்டாம்.ஸ்விக்கி 2019 ஜனவரி முதல் 2019 அக்டொபர் மாதம் வரை எடுத்துக்கொண்ட ஆர்டர்கள்களின்படி எடுத்த கணக்குகள் இவை!

pizza

குலாப் ஜாமுன் – 17,69,399, ஹல்வா – 2,00,301, இதில் புதியவகை ஸ்வீட் பலூடா 11,94,732 ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதில் ‘சாக்கோ பை அண்ட் ட்ரின்க்’ எனும் உணவு சண்டிகரில் மட்டும் 79,242 முறை ஆர்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது! ஸ்விக்கி 306 சதவீதம் மாமிசம்,முட்டை,மற்றும் நான் ஸ்டார்ச்சி உணவுகளின் ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கீடொஜெனிக்  என்னும் டயட் வகையை சார்ந்தது. 

jamun

இவையெல்லாம் அறிவித்த ஸ்விக்கி, தனது வாடிக்கையாளர்கள் செய்த அசாதாரண ஆர்டர்களையும்  வெளியிட்டது. வாடிக்கையாளர்களுள் சிலர் ஸ்விக்கி ஸ்டோரை குர்கானில் உள்ள ஒரு ஆயுர்வேதிக் கடையில் மாட்டு சிறுநீரும் ஆர்டர் செய்யப்பட்டதென்பதை தெரிவித்தது! 

delivry

ஸ்விக்கி நிறுவனம் பெண்களையும் வேலைக்கு நியமித்துள்ளது சுமார் 1000 பெண் பணியாளர்களை உள்ளடக்கிய இந்நிறுவனம் கொச்சியில் பணிபுரியும் சுதா என்னும் பெண் வேலைக்கு சேர்ந்த 13மாதங்களிலே 6,838 ஆர்டர்களை விநியோகித்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளது. 

இன்னும் ஸ்விக்கிக்கு ஆர்டர் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை! foodie இந்தியா!Foodie People!