நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் ஏ.என்.பி.ஆர் கேமரா பொருத்தம்!

 

நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் ஏ.என்.பி.ஆர் கேமரா பொருத்தம்!

அதிநவீன திறன் கொண்ட 8  ANPR  (Automatic Number Plate Recognition) சிசிடிவி கேமராக்கள் உட்பட 217 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை இன்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். 

சென்னையை அடுத்த அக்கரை சோதனைச்சாவடி, நீலாங்கரை மற்றும் கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிநவீன திறன் கொண்ட 8  ANPR  (Automatic Number Plate Recognition) சிசிடிவி கேமராக்கள் உட்பட 217 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை இன்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். 

ANPR

நிகழ்ச்சியில் பேசிய கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், “போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்டவை ஏ.என்.பி.ஆர் சிசிடிவி கேமராக்கள். சிசிடிவி கேமரா மூலம் 50% சதவீத குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமராக்கள் உதவுகின்றன. போக்குவரத்து விதிகளை மீறி சென்றாலோ, ஹெல்மெட் போடாமல் சென்றாலோ இந்த கேமராக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிப்பதுடன், குற்றவாளிகளின் பதிவு எண்ணை படம் பிடித்து அவர்களின் முகவரிக்கு அபராத ரசீதை அனுப்பும்” என்றார்.