நாட்டின் பாதுகாப்பான நகரம் சென்னைதான்! – கமிஷனர் சொல்கிறார்

நாட்டின் பாதுகாப்பான நகரம் சென்னைதான்! – கமிஷனர் சொல்கிறார்

சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடந்த சிறப்பு அணிவகுப்பில் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் விஸ்வநாதன் பங்கேற்றார். சிறப்பாக பணியாற்றிய 608 காவலர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்களை அவர் வழங்கி கவுரவித்தார்.

இந்தியாவில் பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது என்று சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடந்த சிறப்பு அணிவகுப்பில் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் விஸ்வநாதன் பங்கேற்றார். சிறப்பாக பணியாற்றிய 608 காவலர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்களை அவர் வழங்கி கவுரவித்தார்.

vishvanathan.jpg1

பின்னர் பேசிய அவர், “காவல் நிலையங்களைத் தூய்மையாக பராமரித்து, போக்குவரத்துக் காவல் பணியில் பல நவீன மயமான திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் சென்னை காவல் துறைக்கு ஸ்காட்ச் நிறுவனம் மூன்று விருதுகளை அளித்து பெருமைபடுத்தியுள்ளது. சென்னை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களை மாநகரம் முழுவதும் பொருத்தி, சென்னையை பாதுகாப்பான நகராக மாற்ற உழைத்து வரும் காவல் துறையினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். “போலீசார் எஜமானர்கள் இல்லை. சீர்திருத்தவாதிகள்” என்ற மகாத்மா காந்தியின் கூற்றுக்கேற்ப ஒவ்வொருவரும் விளங்க வேண்டும். நமது பணிகளைப் பாராட்டி மக்கள் நமக்கு அளிக்கும் விருதுகளே நமக்கு பெருமை” என்றார்.