நாட்டின் பணக்கார கோயிலுக்கே இந்த நிலைமையா ? 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த திருப்பதி!?

 

நாட்டின் பணக்கார கோயிலுக்கே இந்த நிலைமையா ? 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த திருப்பதி!?

திருப்பதி கோயில் மூடப்பட்டு பக்தர்கள் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையான் கோயிலுக்கு பலகோடி ரூபாய் வருமானம் தடைப்பட்டு விட்டதாக தெரிகிறது. 

கொரோனா எதிரொலியாக திருப்பதி தேவஸ்தானம் 1,300 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய பணக்கார கடவுள் என்று கூறப்படுபவர் திருப்பதி ஏழுமலையான். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி கோயில் மூடப்பட்டு பக்தர்கள் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையான் கோயிலுக்கு பலகோடி ரூபாய் வருமானம் தடைப்பட்டு விட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் 1,300 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.  கடந்த மே 1 ஆம் தேதி முதல் ஊழியர்களை பணிக்கு வரவேண்டாம் என தேவஸ்தானம் போர்டு  தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் சம்பந்தபட்ட ஊழியர்கள்  இந்த நேரத்தில் வேறு வேலை கிடைக்காமல் வீட்டில் முடங்கி போயுள்ளனராம். நாட்டின் பணக்கார கோவிலான திருப்பதியிலேயே இந்த நிலைமை என்றால் மக்களின் நிலை என்ன என்று பலரும் பயத்தில் உள்ளனர். 

t

ஆனால் மற்றொரு புறமோ தொழிலாளர்களை நிர்வகிக்கும் மனித வள நிறுவனத்துடன் டிடிடி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஏப்ரல் 30 அன்று முடிந்ததால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பது விரைவில் தெரியவரும்.