நாடே எதிர்நோக்கும் அயோத்தி வழக்கு தீர்ப்பு: உடனடி தகவல்களுடன்!

 

நாடே எதிர்நோக்கும் அயோத்தி வழக்கு தீர்ப்பு:  உடனடி தகவல்களுடன்!

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின்  கடைசிகட்ட விசாரணை அக்டோபர் 18ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு  அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும்  2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை  விசாரித்து வந்தது. அதாவது கடந்த  2010ஆம் ஆண்டு  அலகாபாத் உயர்நீதிமன்றம்,    அயோத்தியில்  உள்ள இடத்தை  ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசரமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மூன்று பிரிவினரும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின்  கடைசிகட்ட விசாரணை அக்டோபர் 18ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 

  • அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது 
  • அயோத்தி தீர்ப்பு  வழங்கவுள்ள நிலையில் உச்சநீதிமன்ற பகுதியில் 144 தடை உத்தரவு
  •  அனைவரும் அமைதிகாக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!
  • அயோத்தி தீர்ப்பு வழங்க உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகியோருக்கு Z+ அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
  •  இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு… தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். 
  • அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி எதிரொலி: நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி அமித்ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். 
  • அயோத்தி வழக்கின் மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்  தீர்ப்பு வழங்கவுள்ள அறைக்கு  வருகை 
  • அயோத்தி தீர்ப்பை வாசிக்க தொடங்கினார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 
  •   5 நீதிபதிகளும் ஒரு மனதாக ஷியா  வக்ஃபு வாரிய  மனுக்களை  தள்ளுபடி செய்தனர். 
  • தீர்ப்பை முழுவதுமாக வசித்து முடிக்க அரைமணிநேரம் ஆகும் என தகவல்
  • பக்தர்களின்  நம்பிக்கையை நீதிமன்றம் ஏற்க வேண்டும். மத நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடாது. அயோத்தியில் பாபரின் தளபதியால் மசூதி கட்டப்பட்டதை நீதிமன்றம் ஏற்கிறது: தலைமை நீதிபதி 
  •  நிர்மோஹி அக்காரா மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி 
  • பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு கட்டுமானம் இருந்தது. ஆனால், அது இஸ்லாமிய கட்டுமானம் அல்ல : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

  • 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது : உச்ச நீதிமன்றம் 

  • இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 

  • அயோத்தி இடம் இந்துக்களே சொந்தம்:உச்ச நீதிமன்றம் தீர்ப்பு