நாடு முழுவதும் 351 நதிகள் கடும் மாசு- மத்திய அரசு

 

நாடு முழுவதும் 351 நதிகள் கடும் மாசு- மத்திய அரசு

நாடு முழுவதும் சுமார் 351 நதிகள் கடுமையாக மாசடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 351 நதிகள் கடுமையாக மாசடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கங்கை நதியை சுத்தப்படுத்த 2014ல் பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார். கடந்த 5 வருடங்களில் கங்கை நதி ஓரளவாவது சுத்தமாகியுள்ளதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். கங்கை நதியை 5 ஆண்டுகளாக சுத்தப்படுத்தியும் இன்னும் அசுத்தமாக இருக்கிறது என மத்திய அரசே தெரிவித்துள்ளது. கங்கை நதி நீர் குடிக்கவோ, குளிக்கவோ ஏற்றதல்ல என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. கங்கையில் தொடர்ந்து கழிவுகள் கலப்பதால் மாசடைந்து காணப்படுகிறது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களில் கங்கை நதி பாயும் பெரும்பாலான பகுதிகளில் நீரானது குடிக்கவோ, குளிக்கவோ ஏற்றதாக இல்லை. இந்த நதி நீரில் கோலி பார்ம் என்ற பாக்டீரியா அதிக அளவில் காணப்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 6 நதிகள் கடுமையாக மாசடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. காவிரி, மணிமுத்தாறு, தாமிரபரணி, பவானி, சரபங்கா, வசிஷ்டா ஆகிய 6 நதிகள் கடுமையாக மாசடைந்துள்ளன.