நாடு முழுவதும் வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

 

நாடு முழுவதும் வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது

 

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று முறை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு

இந்நியைில், கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் இரு வாரங்களுக்கு பொதுமுடக்கத்தை தொடர வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு தேவையான மாற்றங்கள் அல்லது தளர்வுகளை அறிவிக்கும்படி தேசிய செயற்குழு கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளது.. அதில், மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.